பித்தப்பை கற்கள்
Gall Stone Surgery in Tamil Tamilnadu India – Chennai, Coimbatore, Madurai, Palani, Trichy, Erode, Tirupur, udumalpet
Gall stone Surgery services at Sakthi Fertility center in Coimbatore, Madurai, Palani.
Gall Stone Surgery Affordable cost in Chennai / Coimbatore / Madurai / Palani / Tanjore / Trichy / Erode / Tirupur with best Results / Success rate
மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள்.
இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.
- பித்தப்பைக்கல் அல்லது பித்தக்கல் என்பது பித்தத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஒன்றாகச்சேர்ந்து இறுக்கமடைந்து உருவாகும் படிகத் திரளமைப்பு ஆகும்.
- இந்தக் கற்கள் பித்தப்பையில் உருவாகினாலும் கல்லீரல், பித்தப்பை, பித்தக்கான்கள் அடங்கியுள்ள கல்லீரல் பித்தப்பைத் தொகுதியின் பித்தப்பைக்கான், பொதுப் பித்தக்கான், கணையக் கான், வாட்டரின் குடுவையம் முதலிய வழிகளுக்குச் செல்லக்கூடியது.
- பித்தப்பையில் பித்தக்கற்கள் தேங்கியிருப்பது அழற்சி தொடர்புடைய இடர்ப்பாடான கடிய பித்தப்பையழற்சிக்கு வழிகோலலாம். கடிய பித்தப்பையழற்சியில் பித்தம், பித்தக்கற்கள் பித்தப்பையில் தேங்கியிருப்பதால் குடல் நுண்ணுயிரிகளால் இரண்டாம்நிலைத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.
- ஏனைய பித்தவழிகளில் கற்கள் தேங்குதல் பித்தக்கான்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்நிலைமை கணையவழற்சி, பித்தக்கான் அழற்சி போன்ற பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரு இடர்ச் சந்தர்ப்பங்களும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இவை அவசரநிலை மருத்துவ தேவைகளாகக் கருதப்படுகின்றன
பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது.
கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது.
அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும்.
நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது.
பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. 97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.
கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் பித்தப்பையினுள் அது செல்லும்.
நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், `பித்த நீர் தேவை’ என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது, தன்னைத்தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் குழாய்க்குள் அனுப்பிவைக்கும்.
அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.
- உடல் பருமன்
- பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.
- ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.
- அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.
- கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.
- பரம்பரைக் கோளாறு.
- மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.
- நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.
- குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.
- கர்ப்பம்.
- அடிக்கடி விரதம் இருப்பது.
- கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.
- முறையான உடற்பயிற்சி இல்லாதது.
- ‘சிக்கில் செல்’ ரத்தசோகை.
- பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.
பித்தக்கற்கள் வெவ்வேறு உருவங்களையும் அளவுகளையும் கொண்டவை. ஒரு சிறிய மணற் துணிக்கையின் அளவில் இருந்து குழிப்பந்தின் அளவு வரை இவற்றின் பருமன்கள் வேறுபடக்கூடியவை.
பித்தப்பையுள் ஒரு தனித்த பெருங்கல்லாகவோ அல்லது சிறிய பல கற்களாகவோ காணப்படலாம். கற்கள் ஆக்கப்பட்ட பொருட்களைப் பொறுத்து பித்தக்கற்களை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்: கொலசுட்ரால் கற்கள், கரும் நிறமியக் கற்கள், கலப்புக் கற்கள்.
கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீர் கொலசுட்ராலால் அதிசெறிவூட்டப்பட்டதன் விளைவாக கொலசுட்ரால் கற்கள் உருவாகுகின்றன. பொதுவாக இவற்றின் நிறங்கள் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்து கரும்பச்சை, பழுப்பு, சுண்ணாம்பு வெள்ளை நிறம் வரை வேறுபடும். பித்தக்கற்கள் என்று பொதுவாகப் பார்க்குமிடத்து அவற்றில் 80% ஆனவை கொலசுட்ரால் கற்கள் ஆகும்.
பிலிருபின் சிவப்பணுக்களின் முதன்மை பாகமான ஈமோகுளோபின் என்னும் புரதத்தில் உள்ள இரத்த இரும்பின் இயல்பான சிதைமாற்றத்தின் மஞ்சள் நிற முறிவு விளைபொருளாகும்.
பித்தநீரிலும், சிறுநீரிலும் பிலிருபின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளில், மிக அதிக அளவு பிலிருபின் காணப்படுவது சில நோய்களுக்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது.
சிராய்ப்புகளில், சிறுநீரில் காணப்படும் மஞ்சள் நிறத்திற்கும், மஞ்சள் காமாலையில் காணப்படும் நிறமாற்றத்திற்கும் பிலிருபின் காரணமாகிறது.
பிலிருபின் தாவரங்களிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது
பிலிருபின் கழிவுப் பொருளாக உள்ளதால், இதற்கு இயல்பான அளவுகள் இல்லை. எனவே, நம் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள், அதன் உற்பத்திக்கும்-
- மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள்.
- இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.
- சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 25 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.
சிறிய அளவில் உள்ள பித்தப்பைக் கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்றுப் பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து வெளியேற்றலாம். என்ற போதிலும் ‘பித்தப்பை நீக்கம்’ எனப்படும்.
அறுவை சிகிச்சை பித்தப்பைக் கற்களைத் தடுப்பதற்குச் சிறந்த வழி. பித்தப்பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளில் ‘லேப்ராஸ்கோப்பி’ அறுவை சிகிச்சை முக்கியமானது.
இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட அடுத்த நாளில் வீட்டுக்குத் திரும்பி விடலாம். அடுத்த ஒரு வாரத்தில் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ள முடியும்.
இப்போது இதற்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை செய்யும் நவீன முறை அறிமுகமாகியுள்ளது. ‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி என்று அதற்குப் பெயர். இந்த முறையில் பித்தப்பையை நீக்காமல், பித்தப்பைக் கற்களை மட்டுமே அகற்றுகிறார்கள்.
இது அடைப்புக் காமாலை உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. வாய்வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பி உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல்…. ஆகியவற்றை எல்லாம் கடந்து, பித்தக் குழாய் வழியாகக் கற்கள் உள்ள பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களை செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, அவற்றின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுத்துவிடுகிறார்கள். இதனால் பித்தநீர்ப் பாதை சரிசெய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகிவிடுகிறது.
“பித்தப்பையை நீக்கிவிட்டால் பித்தநீர் சுரக்காது பிறகு உணவு சரியாகச் செரிமானம் ஆகாது” என்று பல பேர் தவறாக நினைத்துப் பித்தப்பையை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர்.
உண்மை என்னவென்றால், கல்லீரலில் மட்டுமே பித்தநீர் சுரக்கிறது. அது பித்தநீர்க் குழாய் மூலமாக முன்சிறுகுடலை வந்தடைகிறது. அதற்கு முன்பு அது பித்தப்பையில் தங்கிச் செல்கிறது, அவ்வளவுதான்.
பித்தப்பையை நீக்கியவர்களுக்குப் பித்தநீரானது நேரடியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேர்ந்துவிடும். இவர்களுக்கு உணவுச் செரிமானம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
பித்தநீருக்குக் கல்லீரல் என்பது பிறந்த வீடு. பித்தப்பை என்பது விருந்தினர் வீடு. விருந்தினர் வீடு இல்லாவிட்டாலும், இனிதாக வாழ முடியும் அல்லவா? அதுமாதிரிதான்.
பித்தப்பை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம். என்ன…. ஒரே ஒரு நிபந்தனை. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
Videos
Editor Rating
- Rated 5 stars
- Spectacular
- Gall Stone in Tamil
- Reviewed by:
- Published on:
- Last modified:
- call9626200600